கடந்த 14ம் தேதி மதியம் பஞ்சப்பள்ளியில் உள்ள காமராஜ் நகரில் மின்கம்பம் நடும் பணியில் சக பணியாளர்களுடன் ஈடுபட்டிருந்தார்.
மின்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்த போது மேலே சென்ற உயர்மின்அழுத்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து மாதேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழ்ந்தார்.
தகவலறிந்த பஞ்சப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்று விசாரனை நடத்தியதில் மின் கம்பியாளர் வேலை நேரத்தில் சம்பவ இடத்தில் இல்லாததும், மின்கம்பத்தில் உள்ள மின் இணைப்பை துண்டிக்காததும் தெரிய வந்தது, இந்நிலையில் நேற்று முன்தினம் தேதி மாதேசனின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து சீரியம்பட்டி கிராமத்திற்க்கு அடக்கம் செய்ய கொண்டு வரப்பட்ட நிலையில், மாதேசனின் மனைவி மற்றும் உறவினர்கள் மாதேசன் இறந்ததற்க்கு மின்வாரிய அதிகாரிகளின் அலட்சிய போக்கே காரணம், எனவே மிழக அரசு மாதேசன் குடும்பத்திற்க்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மின் கம்பியாளர் பெரியசாமியை மாவட்ட ஆட்சியர் சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டதுடன், இது தொடர்பாக உரிய விசாரனை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார். ச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத் உள்ளது.

