தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஸ்ரீவாசவிமகால் அருகே பழனி சித்தா ஆதுலர்சாலை மருத்துவமனை மற்றும் பாலக்கோடு அரிமா சங்கம் இனைந்து இலவச மருத்துவமுகாம் நடைப்பெற்றது. பாலக்கோடு அரிமா சங்க தலைவர் கேசவராஜ் தலைமை வகித்து முகாமினை தொடங்கி வைத்தார்.
நிகழ்சிக்கு மருத்துவமனை இயக்குநர் விநாயகன், அரிமா சங்க நிர்வாகிகள் முத்து, நாகராஜி, சக்திவேல், கிரிதர், வழக்கறிஞர் சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில் மூட்டுவலி, சுவாசநோய்கள், சர்க்கரை நோய், தோல்நோய்கள், மூலம், பவுத்திரம், கண் சம்மந்தப்பட்ட நோய்கள், இரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளை செய்தனர். இதில் பாலக்கோடு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 500 பேர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.
இம்முகாமில் மருத்துவர்கள் சிவலட்சுமணன், கார்த்திக், அகிலா, பெனாசிர் பேகம், ராஜேஸ்வரி. சுஜிதா, ரமேஷ், ராமமூர்த்தி செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

