Type Here to Get Search Results !

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் மழைநீர் சேகரிப்பு குறித்த குறும்படங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் இன்று கொடியசைத்து துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக, மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் மழைநீர் சேகரிப்பு குறித்த குறும்படங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் இன்று (12.08.2024) கொடியசைத்து துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.


பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: மழைநீர் உயிர்நீர். ‘நீரின்றி அமையாது உலகு” என்பது வள்ளுவர் வாக்கு தண்ணீரின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையிலும், செயல்படுத்திடும் வகையிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்றைய தினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தென்மேற்கு பருவமழை மற்றும் எதிர் வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் மழைநீரை முழுவதுமாக சேகரித்து நிலத்தடி நீர்மட்டம் உயர்த்திடும் வகையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நிறுவி பராமரித்து, மழைநீரை முறையாக சேகரிக்க வேண்டும். 


மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை புனரமைத்து மழைநீரைச் சேகரித்து, தண்ணீர் பிரச்சனையை தீர்ப்போம். எதிர்வரும் மழைக்காலம் எண்ணற்ற நன்மைகளை வழங்கும் காலம் அருகி வரும் நீர் வளத்தினை மேம்படுத்திட பெருகி வரும் மழைநீரைச் சேகரிப்போம். கண்மாய்கள், குளங்கள், ஊரணிகள், ஏரிகள் பழைமை வாய்ந்த நீராதாரக் கட்டமைப்புகளை ஆழப்படுத்தி மேம்படுத்துவோம் மற்றும் நீராதாரங்களை போற்றுவோம். வீடுகளில் மழை நீர் சேகரிப்பு வீட்டுக் கூரையை மழைக்காலத்திற்கு முன் சுத்தப்படுத்தி, காய்ந்த இலை சருகுகளை அப்புறப்படுத்த வேண்டும். 


மழைநீர் கொண்டு வரும் குழாய்களில் ஏற்படக் கூடிய அடைப்புகளை நீக்கி, பழுதுகளை சரிசெய்திட வேண்டும். மேலும், வடிகட்டி தொட்டியில் உள்ள கூழாங்கற்கள் / ஜல்லி கற்கள் ஆகியவற்றை சுத்தம் செய்து மீண்டும் நிரப்ப வேண்டும். பெருமணல் சுத்தம் செய்யப்பட்டு தேவைப்படுமானால் மாற்றப்பட வேண்டும். சேமிப்புத்தொட்டி சுத்தம் செய்யப்பட்டு நன்கு பராமரிக்கப்பட வேண்டும். 1000 லிட்டர் அளவுள்ள சேமிப்புக்கு 4 கிராம் பிளீச்சிங் பவுடர் கரைசலை சேமிக்கப்பட்ட மழைநீரில் கலக்க வேண்டும். 


வீட்டுக் கூரையின் மேல் விழும் மழைநீரை, வடிகுழாய் மூலம் வடிகட்டும் குழிக்குள் செலுத்தி மழைநீரை சேமிக்கலாம். எனவே, பொதுமக்கள் மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி மழைநீரை சேமித்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியானது மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து இலக்கியம்பட்டி வரை நடைபெற்றது. இப்பேரணியில் இலக்கியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மகேஸ்வரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் திரு.பாலசுப்ரமணியன், செயற்பொறியாளர் திரு.ரவிக்குமார், உதவி நிர்வாக பொறியாளர்கள் திரு.ஆர்.ரோகத் சிங், திரு.முருகன், துணைநிலநீர் வல்லுநர் திருமதி.ராதிகா, உதவி பொறியாளர் திரு.செந்தில்குமார், இளநிலைநீர் பகுப்பாய்வாளர் திரு.சுரேஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies