தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரிமா சங்கம் சார்பில் கடமடை காந்தி ஆசிரமத்தில் பயிலும் மாணவர்களுக்கு ஒருநாள் பசிப்பிணி போக்கும் வகையில் உணவளிக்கும் நிகழ்ச்சி பாலக்கோடு அரிமா சங்க தலைவர் கேசவராஜ் தலைமையில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அரிமா சங்க நிர்வாகிகள் பி.என்.பி. முத்து, ஓம்முருகா சரவணன், நாகராஜி, காசி, ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் காந்தி ஆசிரமத்தில் தங்கி பயின்று வரும், மாணவர்களுக்கு காலை, மாலை மற்றும் இரவு என மூன்று வேளை உணவு வழங்கினர். பசிப்பிணி எனும் நிகழ்ச்சி மூலம் மாணவர்களுக்கு உணவளித்த அரிமா சங்க நிர்வாகிகளுக்கு காந்தி ஆசிரம் நிர்வாகி வாசகர் நன்றி தெரிவித்தார்.

