தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள ஏரியூரில் நில தகராறில் ஏரியூர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், ஜீவா மற்றொரு தரப்பான நாகராஜ் ஆகிய இரு தரப்புக்கும் நில பிரச்சினை இருந்து வந்துள்ளது இதனிடையே இரு தரப்பும் ஏரியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இன்று காவல் நிலையத்தில் விசாரணைக்காக வந்த இரு தரப்பினரும் பெட்ரோல் பங்க் அருகில் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததின் பேரில் ஏரியூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதில் பிரபாகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர் நிலத்தகராறில் சாலையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

