தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள எம்.பள்ளிபட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொல்.திருமாவளவன் பிறந்த நாள் விழா கட்சியின் அங்கிகார விழா நாடாளுமன்ற தேர்தல் வெற்றி விழா என முப்பெரும் விழா நடைபெறுகிறது இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா தலைமை வகிக்கிறார், வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.மூவேந்தன் வரவேற்புரை ஆற்றுகிறார், சிறப்பு விருந்தினர்களாக தலைமை நிலைய செயலாளர் தகடூர் மா.தமிழ்ச்செல்வன் மாநில அமைப்பு செயலாளர் கி.கோவேந்தன் முன்னாள் மண்டல செயலாளர் பொ.மு.நந்தன் மண்டல செயலாளர் தமிழ்அன்வர் மண்டல துணை செயலாளர் மின்னல்சக்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்கள்.
முதல் நாள் நிகழ்ச்சியில் சிறுவர்களுக்கான நடன நிகழ்ச்சியும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை10 மணியளவில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து வானவேடிக்கையுடன் திருத்தேர் பவனி வருதல் இரவு தென்னகப் புகழ் வர்மா பெருமையுடன் தில்லை தாண்டவ் என்னும் திரைப்பட நடன நிகழ்ச்சியும் அதைதொடர்ந்து திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் பொது அன்னதான நிகழ்வும் இரவு 9 மணி அளவில் தெருக்கூத்து நாடகம் நடைபெறுகிறது எனவே முன்னாள் இந்நாள் ஒன்றிய நகர முகாம் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என எம்.பள்ளிப்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.