தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் சேவை (1962) - ஐ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன் ஆகியோர் முன்னிலையில் ஊர்தியின் சாவியினை ஓட்டுநர்களிடம் இன்று (29.08.2024) வழங்கினார். உடன் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (பொ) மரு.இளவரசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, உதவி இயக்குநர்கள் மரு.ஜெயந்தி, மரு.இராமகிருஷ்ணன், கால்நடை மருத்துவர்கள், உதவி அலுவலர்கள் உள்ளனர்.