தருமபுரி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கூடுகை மற்றும் கூட்டாண்மை, நிறுவன கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பாடு பிரிவின் கீழ் வட்டார வள பயிற்றுநர் (BRP) மூலம் வட்டார அளவிலான கூட்டமைப்புகள் (BFL), ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் (PLF), சமுதாய வள பயிற்றுநர்கள்(CRPs) மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கு (SHG) பயிற்சி அளித்திட வட்டார வள பயிற்றுநர் (BRP) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பதாரர் கீழ்க்காணும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். இப்பணியிடமானது முற்றிலும் தற்காலிகமானதாகும்.
- சுய உதவி குழுவில் உறுப்பினராக உள்ள பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- 01.03.2024 அன்று 25-45 வயதுக்குள் இருக்க வேண்டும். |
- ஏதேனும் ஒரு பட்ட படிப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
- வட்டார அளவிலான கூட்டமைப்பு / ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் 2-3ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை: வழங்கப்படும்.
- தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
- தகவல்களை தெரிவிக்கும் திறன் மற்றும் மக்களிடம் செயல்திறன் வெளிப்படுத்தும் தனித்திறமை பெற்றிருக்க வேண்டும்.
- கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும் (Excel, Word & Etc...)
மேற்காணும் நிபந்தனைகளுக்குட்பட்டு, விண்ணப்பிக்க விரும்பும் மகளிர் சுய உதவிக்குழுவைச்சார்ந்த பெண்கள் 20.08.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, இரண்டாம் தளம், DRDA கட்டிடம், தருமபுரி-க்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பணி நியமனம் கோரும் விண்ணப்பத்தினை சுய விபரம் அடங்கிய ஆவண நகல்களுடன் சமர்ப்பித்திட தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தெரிவிக்கப்படுகிறது.

