தருமபுரி மாவட்டம் மொரப்பூர் டாக்டர் அண்ணல் நகரில் அமைந்துள்ள ஸ்ரீகாளியம்மன் ஸ்ரீசக்திமாரியம்மன் 56ம் ஆண்டு மாவிளக்கு திருவிழா மற்றும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல். திருமாவளவன் அவர்களின் 62வது பிறந்த நாள் விழா என முப்பெறும் விழா டாக்டர் அண்ணல் நகரில் நடைபெறுகிறது இவ்விழா கடந்த 13ம் தேதி கொடியேற்றி அபிஷேகம் செய்து தொடங்கி நடைபெற்று வருகிறது இதையடுத்து ஊர்பொதுமக்கள் சார்பில் மொரப்பூரில் நடைபெறும் முப்பெறும் விழாவில் பங்கேற்க வேண்டும் என விசிக கிழக்கு மாவட்ட செயலார் சி.கே. சாக்கன்சர்மா அவர்களை மாவட்ட அலுவலகத்தில் சந்தித்து சால்வை அணிவித்து துண்டறிக்கை வழங்கி அழைப்பு விடுத்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் வை.திருலோகன் ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயசுதாதருமன் முன்னாள் ஊராட்சி தலைவர் கவிதாபோஸ் கலைநாதன் தீத்தான் தங்கராஜி பெப்சிபிரபு பிரசாத் கலைஞர் நகர் முகாம் செயலாளர் அருள்வளவன் மின்னல்காவேரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

