தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடி ஏற்றி காவல் துறை அணிவகுப்புகள் நடைபெற்றது.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் திருமதி கி.சாந்தி அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் அவர்கள் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி கௌரவ தலைவர் பா.ம.க அவர்கள் கலந்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை சார்பில் அணி வகுப்புகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பள்ளி குழந்தைகள் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறை மற்றும் அரசு மருத்துவர் அரசு அலுவலர்கள் நகராட்சி மற்றும் ஊராட்சி பணியாளர் அனைவருக்கும் பாராட்டு சான்றிதல் வழங்கப்பட்டது.

