தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம், பேளாரஅள்ளி, பி. செட்டி அள்ளி ஊராட்சிகளில் சுதந்திர தின கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராதா மாரியப்பன், கணபதி ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் ஊராட்சிமன்ற செயலாளர்கள் முருகேசன், கோவிந்தன் வரவு செலவு கணக்குகளை படித்து காட்டினர். இதையடுத்து பாலக்கோடு பேரூராட்சியில் இருந்து வெளியேறும் கழிவுநீரை வாய்க்கால் மூலம் பேளாரஅள்ளி ஊராட்சியில் உள்ள சவுரிகொட்டாவூர் பகுதிக்கு கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர். மேலும் மழைகாலம் என்பதால் காய்ச்சல், சளி, போன்ற நோய்கள் பராவாமல் இருக்க தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
அதனை தொடர்ந்து வீடு இல்லாத 116 நபர்களுக்கு தமிழக அரசு வழங்கும் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கான பணி ஆணையை வழங்கினர்.
இக்கிராமசபை கூட்டத்தில் துணைத் தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், வேளாண்மை துறை, மின்சாரதுறை, ஊரக உள்ளாட்சி துறை, மருத்துவ துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

