வீடுகளில் நூலகம் வைத்துள்ளவர்களுக்கு விருது : விண்ணப்பிக்க அழைப்பு தருமபுரி வீடுகளில் சொந்தமாக நூலகம் வைத்துள்ளவர்கள் அதற்கான விருது பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கி.சாந்தி, இ.ஆ.ப, அவர்கள் தகவல்.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுகளில் நூலகம் அமைத்து சிறப்பாக பயன்படுத்தி வரும் தீவிர வாசர்களை கண்டறிந்து, அவர்களுக்கு விருதாக 3 ஆயிரம் ரொக்கம், கேடயம், சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
அதன்படி தருமபுரி மாவட்டத்தில் புத்தக ஆர்வலர்கள், தனிநபர்கள் தங்களின் இல்லங்களில் நூலகம் அமைத்து பராமரித்து வந்தால் அவர்களின் நூலகத்தில் உள்ள நூல்களின் எண்ணிக்கை, எந்த வகையான நூல்கள் மற்றும் அரிய நூல்கள் ஏதாவது உள்ளதா என்ற விவரங்களுடன் வரும் 31ஆம் தேதிக்குள் தருமபுரி மாவட்ட நூலக அலுவலருக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

