Type Here to Get Search Results !

ரூ.6.43 கோடி செலவில் கட்டுமானப்பணிகள் பாலக்கோடு டவுன் பஞ்சாயத்தில் விரைவில் துவக்கம்.


பாலக்கோடு டவுன் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு புதிய கட்டடம் உட்பட மொத்தம் ரூ.6.43 கோடி மதிப்பில் விரைவில் கட்டு மானப்பணிகள் நடைபெற உள்ளது என சேர்மன் பி.கே.முரளி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: பாலக்கோடு டவுன் பஞ்சாயத்து வளர்ச்சிக்காக திமுக அரசு மற்றும் பாலக்கோடு டவுன் பஞ்சாயத்து. நிர்வாகம் சார்பில் தொடர்ந்து குடிநீர், சாலை, சாக்கடை கால் வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் பொதுமக்கள், விவசாயிகளின் மேம்பாட்டுக்கு பல வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பாலக்கோடு டவுன் பஞ்சாயத்து நடப்பு காலாண்டு நிதியில் புதிய அலுவலகம் கட்ட ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் புதிய அலுவலகம் கட்டும் பணி தொடங்கப்பட உள்ளது.


இதேபோல், பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டுக்கு வரும் விவசாயிகளின் நலன் கருதி, மழைக்காலங் களில் தக்காளி சேதமா வதை தடுக்கவும், விவசாயிகள் மழையில் நனையாமல் இருக்கவும், ரூ.50 லட்சம் செலவில் மேற் கூரை அமைக்கப்பட உள்ளது. மேலும், தக்காளி மார்க்கெட் அருகே ரூ.50 லட்சம் செலவில் புதியதாக இறைச்சிக்கூடம் அமைக்கப்பட உள்ளது. 


பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடம் மற்றும் பெண்கள் பள்ளிக்கு, 2 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடம், 18 லட்சம் ரூபாய் செலவில் மேல் தெரு கனம்பள்ளி தெருவில் தார் சாலை உட்பட மொத்தம் 6 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் பல கட்டுமானப்பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது, என பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி  தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies