இதனைத் தொடர்ந்து காலை சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் கோவில் பூட்டு உடைந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார் பின்னர் ஊர் பெரியவர்களிடம் முறையிட்டு பாப்பாரப்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து அங்கு வந்த காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு மோப்பநாய்கள் மற்றும் கை ரேகை நிபுணர்களை வரவழைத்து சோதனை நடைபெற்றது.
ஏற்கனவே கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இந்தக் கோயிலில் பூட்டை உடைத்து சாமி கழுத்தில் இருந்த தாலி நகை மற்றும் உண்டியலை திருடி சென்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மாரியப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த உண்டியலை உடைத்து சுமார் 10,000 ரெக்கபணத்தை திருடி சென்றுள்ளனர்.
ஒரே இரவில் இரண்டு கோவில்களில் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த இரண்டு கோவில்களிலும் சிசிடிவி கேமரா இல்லை என தெரிந்து மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.