“தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24 – ல் மாநில அரசின் விருது” 2024 – 25 ஆம் ஆண்டிற்கு வழங்கப்பட உள்ளதால் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் உடன் விண்ணப்பிக்கலாம், தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல், இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது: “தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24 – ல் மாநில அரசின் விருது” 2024 – 25 ஆம் ஆண்டிற்கு வழங்கப்பட உள்ளதால் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் .
தகுதிகள்:
13 வயதிறகு மேல் 18 வயதிற்குட்பட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தைகள் (31 டிசம்பர் –ன் படி)
- பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல்,
- பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு,
- பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல்,
- பெண் குழந்தை ஏதாவது வகையில் சிறப்பான / தனித்துவமான சாதனை செய்திருத்தல்,
- பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்தியிருத்தல்.
- ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல்,
சாதனை புரிந்த 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரினை 30.11.2024 –க்குள் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் கருத்துருவினை மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறும், மேலும் இதுதொடர்பான விபரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், கூடுதல் கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி என்ற முகவரியில் நேரிலும், மாவட்ட சமூகநல அலுவலகத்தின் 04342 - 233088 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு விபரம் தெரிந்துகொள்ள கேட்டுகொள்ளப்படுகிறது.