தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் கூத்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட மடம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லம்மாள் ஆலய ஜீரணோதாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து ஸ்ரீ விக்னேஸ்வரர் பூஜை புண்ணியர் பூஜை யாகசாலை முகூர்த்தக்கால் நடுதல் முளைபாலிகை இடுதல் கங்காணம் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது அதனைத் தொடர்ந்து கோபுரத்திற்கு நவதானியம் நிரப்புதல் நிகழ்வும் மங்கல இசையுடன் ஸ்ரீ எல்லம்மாள் ஸ்ரீ துர்க்கை ஸ்ரீ ரேணுகாம்பாள் ஸ்ரீ லட்சுமி கரிக்கோலம் புறப்பாடு நிகழ்வு அதனைத் தொடர்ந்து நேற்று பென்னாகரம் காவல் நிலைய வளாகத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் இருந்து காவிரி கங்கை தீர்த்த குடம் பால்குடம் மற்றும் பன்னீர்குடம் எடுத்துக்கொண்டு பம்பை முழங்க கலை நிகழ்ச்சி வான வேடிக்கையுடன் மடம் ஸ்ரீ எல்லம்மாள் ஆலயம் வந்தடைந்தது அதனை தொடர்ந்து மங்கல இசை நிகழ்ச்சியுடன் முதற்கால யாகபூஜை வாஸ்துசாந்தி பிரவேசபலி மிருச்சங்கிரகனம் அங்குரார்ப்பணம் ரக்ஷபந்தனம் தீரயாஹிதி பூர்ணாவதி தீபாரதனை பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இன்று காலை இரண்டாம் கால யாக பூஜை தத்துவார்ச்சனை நாடி சந்தானம் திரவியாத்திரதானம் சங்கல்பம் தீபாராதனை கடம்புறப்பாடு நிகழ்வை தொடர்ந்து விமான கோபுரமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
மேலும் தீபாரதனை காண்பித்து அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளித்தனர் தரிசனம் செய்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.