தர்மபுரி மாவட்டம் பாப்பாரபட்டி அருகே உள்ள எண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி வடிவேல், இவர் தனது தோட்டத்தில் மலர் சாகுபடி செய்து அதனை தர்மபுரி பூ மார்கெட்டிற்கு தினமும் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் கொண்டு வந்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்வது வழக்கம்.
இன்று காலை அதேபோல தர்மபுரி பூ மார்கெட்டிற்கு தனது தோட்டத்தில் அறுவடை செய்த பூக்களை விற்பனை செய்துவிட்டு தனது வீட்டிற்கு திரும்பும் பொழுது திடீரென தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் மின்கசிவு காரணமாக கரும்புகை கிளம்பியதால் உடனடியாக பைக்கை சாலையோரம் நிறுத்திவிட்டு விலகினார். எலக்ட்ராக் ஸ்கூட்டரில் வந்த புகையை தொடர்ந்து மின்கசிவு காரணமாக மளமளவென பைக் தீப்பற்றி எரிய தொடங்கியது.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ட்டது. தேசிய நெடுஞ்சாலையில் பற்றி எரிந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் வாகன ஓட்டிகள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து தீயணைப்பு படையினர் தண்ணீர் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.
இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி நகர போலிசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


