தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு தேமுதிக சார்பில் நடிகர் கேப்டன் விஜய்காந்த் குறித்து மனிதம் பாடல் முதற் பார்வை வெளியீடு மாநில அவைத் தலைவர் இளங்கோ தலைமையில் நடைப்பெற்றது.
நிகழ்ச்சிக்கு தேமுதிமுக மாவட்ட செயலாளர்கள் விஜய்சங்கர், குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். திரைப்பட இயக்குநர் முனிராஜ் இயக்கி, தயாரித்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த ஆல்பம் 25ம் தேதி சென்னையில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சி அலுவலத்தில் வெளியிடப்பட உள்ளது.
அதன் முன்னோட்டமாக இசை ஆல்பத்தின் பர்ஸ்ட்லுக் எனப்படும் முதற் பார்வையை பாலக்கோடு பேருந்து நிலையம் முன்புமாநில அவைத் தலைவர் இளங்கோ வெளியீடு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் உதயகுமார், பொருளாளர் ராமசந்திரன், பொதுக்குழு உறுப்பிணர்கள் இரத்தினம், கோவிந்தன், ஒன்றிய செயலாளர்கள் முனுசாமி, ஞானவேல், கோவிந்தன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கணேசன், நகர செயலாளர் முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

