அதையடுத்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பாலக்கோடு பேரூராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தெரு நாய்களை பிடிப்பது, பருவ மழை காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்க்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கான பணிகளை மேற்கொள்ளுதல், அரசின் மூலதனமானிய நிதியிலிருந்து பேரூராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி துவங்குதல், பேரூராட்சிக்கு செந்தமான அரசு நிலங்களில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புக்களை அகற்றுதல், அனைத்து வார்டு பகுதிகளிலும் பழுதான சிமென்ட் மற்றும் பேவர்பிளாக் சாலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மழைக்காலங்களில் டெங்கு, மலேரியா, காலரா போன்ற நோய்களில் இருந்து பொதுமக்கள் முன்னெச்சரிக்யாக இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள், துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், டெக்னிசியன், அலுவலர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிவில் துணைத் தலைவர் தாஹசீனா இதாயத்துல்லா நன்றி தெரிவித்தார்.