மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் இணைந்து கலந்துரையாடல் கூட்டம் பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இநநிகழ்ச்சியில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் பள்ளி மேலாண்மை குழு தலைவர் கார்த்திகா பன்னீர்செல்வம் மற்றும் மேலாண்மை குழுவினர் பேரூராட்சி கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர்
இந்நிகழ்ச்சியில் மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை 100 சதவிதமாக கொண்டுவரவேண்டும் என மாணவர்களின் பெற்றோர்களும் , ஆசிரியர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மணிவண்ணன், சசி, வெங்கடேசன், வீரமணி,மோகனசுந்தரி, மோகன், பரணிதரன்,ராஜேந்திரன்,வெற்றிவேல்,செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.