Type Here to Get Search Results !

பாலக்கோடு பேரூராட்சி முன்புள்ள அரசு மருத்துவமனையில் கலைஞர் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துமனையில் கலைஞர்  வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமினை  பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமை வகித்து குத்துவிளக்கு ஏற்று துவக்கி வைத்தார். இம்மாமிற்க்கு வட்டார மருத்துவ அலுவலர் சிவகுரு, தலைமை மருத்துவர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


பொதுமக்களின் சுகாதாரத்தை பேணிகாக்கும் வகையில்  தமிழக அரசு பல்வேறு திட்டங்களை  செயல்படுத்தி வருகின்றது, அதனை தொர்ந்து தமிழக முதல்வர் தொடங்கி வைத்த கலைஞர் வரும்முன் காப்போம் திட்ட  சிறப்பு மருத்துவ முகாமில்  பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை நலம், மகப்பேறு மருத்துவம், ஸ்கேன், அல்ட்ரா ஸ்கேன், காது, மூக்கு, தொண்டை, கால்மூட்டு, இருதய சிகிச்சை, கண் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், மனநல மருத்துவம், சித்த மருத்துவம், ஹோமியோபதி,  நரம்பியல் மருத்துவம் மற்றும் முதியோருக்கான மருத்துவம் போன்ற பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.


மேலும்  ரத்தப் பரிசோதனை, ரத்த உறைதல் பரிசோதனை, ரத்தத்தில் கொழுப்புப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, சளி பரிசோதனை, மலம் பரிசோதனை, கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு, அவர்களுக்கு மேல் சிகிச்சைகள் பரிந்துரை செய்வோருக்கு, உயர் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. இதில் திரளான  பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


இம்முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளவரசு, மருந்தாளுநர் முத்துசாமி, துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், சுகாதார ஆய்வாளர் தமிழ்செல்வன், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies