தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது, இந்த விழாவில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அ மணி பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி ஆகியோர் கலந்துகொண்டு பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அரசு ஆண்கள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அரசின் விலை இல்லா மிதிவண்டி வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் பென்னாகரம் ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

