Type Here to Get Search Results !

பகுஜன் சமாஜ் கட்சியின் தர்மபுரி மாவட்டம் சார்பில் அரூரில் கே.ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.


தருமபுரி மாவட்டம் அரூரில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கே.ஆம்ஸ்ட்ராங்கிற்கு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது,  இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் சட்டமன்ற தொகுதி தலைவர் ஜி.ஏ.முருகன் துவக்கவுரையாற்றினார்  தர்மபுரி மேற்கு மாவட்ட தலைவர் ஆர்.ஹரி  கிழக்கு மாவட்ட தலைவர் அ.சக்திகணேஷ்  ஆகியோர் தலைமை வகித்தனர், மாவட்ட பொது செயலாளர் வி.பி.ரவிந்திரன் முன்னாள் மாவட்ட செயலாளர் வி.ரவி கே.பி.ஸ்டீபன் பி.ராஜேந்திரன் ஜி.நேரு கே.சுந்தர்ராஜ் கே.எம்.சரவணன் ஏ.சிவக்குமார் எஸ்.இளையராஜா  ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


சிறப்பு விருந்தினராக மேற்கு மண்டல  ஒருங்கிணைப்பாளர் கே.தேவேந்திரன் சேலம் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராசா.பார்த்தீபன் ஆகியோர் கலந்து கொண்டு மறைந்த கே.ஆம்ஸ்ட்ராங் படத்திற்கு மெழுகுவத்தி.ஏந்தி நினைவு அஞ்சலி செலுத்தினர் பின்னர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


இந்நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கே. சென்னியப்பன்  கிழக்கு மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் திருப்பத்தூர் மாவட்ட தலைவர் என்.பிச்சை சமூக சமத்துவபடை மாவட்ட தலைவர் சா.புத்தமணி எம்.ராஜேந்திரன்  த.பெ.தி. கொ.வேடியப்பன் விஎஸ்.குமரேசன் பசுமைசீனிவாசன் தா.க.முருகன் ஆர்.பழனிசாமி மாரிக்கண்னு  பழனி உள்பட  பலர்  கலந்து கொண்டனர் இறுதியாக ஜெ.காளிதாஸ் நன்றி கூறினார். 


இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாவட்ட தலைவர் பி.வைகுந்தவாசன் செய்திருந்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies