தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் வீட்டில் வளர்க்கக்கூடிய நாய், பூனை, புறா உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு வளர்ப்பு பிராணிகள் சங்க மாவட்ட தலைவர் வினோத் குமார் தலைமை தாங்கினார். பென்னாகரம் பொறுப்பாளர் மணிவண்ணன் முன்னிலை வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பென்னாகரம், ஏரியூர், பாப்பாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வளர்க்கக்கூடிய வளர்ப்பு பிராணிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தங்கள் வீட்டில் வளர்க்கும் வளர்ப்பு உயிரினங்களுக்கு தடுப்பூசிகளை போட்டு சென்றனர்.

