இதில் வேலூர், வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, சார்ந்த ஆங்கிலத் துறை பேராசிரியை முனைவர் புவனேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 'Research Ethics' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இதில் ஆராய்ச்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய கூறுகள் பற்றியும் சிறப்பான ஆராய்ச்சி கட்டுரைகள் எழுவது பற்றின முக்கிய வழிகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
முன்னதாக ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொ) முனைவர் மோகனசுந்தரம் தலைமை உரை ஆற்றினார். தொடர்ந்து நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரும் துறைத் தலைவருமான பேராசிரியர் முனைவர் கோவிந்தராஜ், துவக்க உரையாற்றினார்.
உதவி பேராசிரியை கிருத்திகா வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக நிகழ்வுக்கு வந்த அனைவரையும் இரண்டாம் ஆண்டு மாணவி செல்வி. செந்தாமரை வரவேற்று பேசினார். இரண்டாம் ஆண்டு மாணவி செல்வி. சோபியா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். இறுதியாக முதலாம் ஆண்டு மாணவி செல்வி மோனிகா நன்றியுரை வழங்கினார்.
நிகழ்வுக்கான ஏற்பாடுகளை துறை கௌரவ விரிவுரையாளர்கள், ஆராய்ச்சி மாணாக்கர்கள் மற்றும் மாணவ மாணவியர் செய்திருந்தனர். இந்நிகழ்வை முதலாம் ஆண்டு மாணவி காவியா தொகுத்து வழங்கினார்.
.gif)

