ஆனால் அவ்வாறு எந்த அனுமதியும் பெறாமல் முறைகேடாக பயன்படுத்தி தனி நபர்களுக்காக கோவில் நிலத்தில் சாலை அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது, நேற்று முன்தினம் பாலக்கோடு தாசில்தார் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய நிலையில் ஊரக உள்ளாட்சி துறை அதிகாரிகளின் மூலம் மீண்டும் அப்பணிகள் நடைப்பெற்று வந்த நிலையில் சோமனஅள்ளி அக்கு மாரியம்மன் கோயிலுக்கு வந்த திருத்தொண்டர் அறக்கட்டளையின் அறங்காவலர் ராதாகிருஷ்ணன் உரிய அனுமதி இன்றி கோயில் நிலத்தில் சாலை அமைக்கும் பணியை கண்டித்தவர், இந்து சமய அறநிலைய கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்களை முறையான அனுமதி பெற்ற பின்னரே பயன்படுத்த வேண்டும், ஆனால் அரசு நிதியை பயன்படுத்தி கோயில் நிலத்தில் அத்துமீறி சாலை பணிகள் அமைத்து வருவது கண்டிக்கதக்கது, இப்பணியை தடுத்து நிறுத்தாவிட்டால் இதற்க்கு உடந்தையாக உள்ள அதிகாரிகள் குற்றவியல் நடவடிக்கைக்கு உட்படுத்தபடுவார்கள் என தெரிவித்தார்.
பாலக்கோடு அருகே அனுமதியின்றி சாலை அமைத்த அதிகாரிகள்; வார்னிங் கொடுத்த அறங்காவலர்.
ஆகஸ்ட் 17, 2024
0
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே சோமனஅள்ளி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஶ்ரீஅக்குமாரியம்மன் கோயிலுக்கு சொந்தமாக 8 ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது. கோயில் நிலங்களில் இந்துசமய அறநிலையத்துறை ஆனையரால் அனுமதி வழங்கப்பட்டால் மட்டுமே அரசோ, அரசு சார்ந்த நிறுவனங்களோ அல்லது தனி நபர்களோ நுழைந்து பணிகளை மேற்கொள்ள முடியும்.
Tags

