இப்போட்டிக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார், உடற்கல்வி ஆசிரியரும் மாநில நல்லாசிசிரியர் விருது பெற்ற ரங்கநாதன்,சரக இணை செயலாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்போட்டியில் பாலக்கோடு, திருமல்வாடி, பெரியூர், மாதம்பட்டி உள்ளிட்ட 8 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டிக்கு உடற்கல்வி இயக்குனர் மாதேஷ், கதிர் உடற்கல்வி ஆசிரியர்கள் அறிவழகன், இளையராஜா, அர்ஜுனன், அசோக்குமார், முருகன், குமரன், பிரபாகரன்,சாரதாமணி, தீபா, தினேஷ், அசோக் மற்றும் ஜமீர் ஆகியோர் போட்டியின் நடுவர்களாக இருந்து செயல்பட்டனர்.
இப்போட்டியில் மாணவர்கள் பிரிவில் 14, 17, 19 வயதுக்குப்பட்ட அணிகளில் முதல் இடத்தை பாலக்கோடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களும், 14 வயதுக்குட்பட்ட போட்டியில் 2ம் இடத்தினை திம்மம்பட்டி செயின்ட்லூசிஸ் மெட்ரிக் பள்ளியும், 17 வயதுக்குட்பட்ட போட்டியில் திருமல்வாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 2ம் இடத்தையும், 19 வயதிற்க்குட்பட்ட போட்டியில் பெரியூர் அரசு ஆண்கள் மேல்நிலபள்ளி மாணவர்கள் 2ம் இடத்தையும் பிடித்தனர்.
அதே போன்று மகளிர் பிரிவில் 14 வயதிற்குட்பட்ட பிரிவில் முதல் இடத்தை பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியும், 2ம் இடத்தை திம்மம்பட்டி செயின்ட்லூசிஸ் மெட்ரிக் பள்ளியும் பிடித்தன. 17வயதிற்குட்பட்ட பிரிவில் மாதம்பட்டி ஆர்.எம்.எஸ் மெட்ரிக் பள்ளி முதல் இடத்தை, பெரியூர் அரசு உயர்நிலைப் பள்ளி 2ம் இடத்தையும் பெற்றன.
19 வயதிற்க்குட்பட்ட பிரிவில் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி முதல் இடத்தையும், திம்மம்பட்டி செயின்ட்லூசிஸ் மெட்ரிக் பள்ளி 2ம் இடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு சான்றிதழ் மட்டும் கோப்பைகள் வழங்கப்பட்டன.
இதில் வெற்றி பெற்றுள்ள அணிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

