தர்மபுரி மாவட்டம் அரூரில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 8 பவுன் நகையை திருடி சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.
அரூர் மேட்டுப்பட்டி சேர்ந்த வினோதினி (45) இவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் இவரது கணவர் ரவி இவர் பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்றனர் பின்னர் மதிய உணவு இடைவேளையின்போது வினோதினி வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது மர்ம நபர்கள் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே சென்று முன்புற கதவை உட்புறமாக தாழிட்டு விட்டு பீரோவில் இருந்த எட்டு பவுன் நகைகளை திருடி சென்றிருப்பது தெரியவந்தது இது தொடர்பாக அரூர் காவல் நிலையத்தில் வினோதினி புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பட்டபகலில் நடைபெற்ற சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

