தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தலைவர் செயலாளர் பதவிக்கான நியமனம் மனு பெறுதல் மற்றும் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட தலைவர் செல்வகுமார் வரவேற்புரை ஆற்றினார் இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பெண்ணாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி கே மணி, வழக்கறிஞர் கே பாலு சமூக நீதிப் பேரவை மாநில தலைவர், ஷேக்மொய்தீன் மாநில சிறுபான்மை இன தலைவர், பொன்மலை மாநில துணைச் செயலாளர் பசுமைத்தாயகம் ஆகியோர் மனுக்களைப் பெற்றுக் கொண்டு கலந்தாய்வு நடத்தினர்.
இறுதியில் சரவணகுமாரி மாவட்ட பொருளாளர் நன்றி கூறினார். இதில் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

