இந்நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட தொழில் மைய மேலாளர் எட்வர்ட் ஸ்டீபன்,பாலக்கோடு வனச்சரக அலுவலர் நடராஜன், பெலமாரன அள்ளி ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு பழங்குடியினர் சங்கம் மாநில பொருளாளர் மோட்டப்பன் தலைமை தாங்கினார்.அரியலூர் மாவட்ட தலைவர் காந்திமதி ரமேஷ் வரவேற்புரை ஆற்றிய நிலையில் தமிழகத்தில் பழங்குடியினருக்கு என ஒரு பாராளுமன்ற தொகுதியை உருவாக்க வேண்டும், சுழற்சி அடிப்படையில் பழங்குடி சட்டமன்ற தொகுதிகளை மாற்றி அமைக்க வேண்டும்,திருச்சியில் ஓர் பழங்குடியினர் பல்கலைக்கழகம் அமைத்தல் வேண்டும், பழங்குடியினருக்கு இலவச வீட்டு மனை, பட்டா மயான, வசதி மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும், பழங்குடியினர் நலத்துறையை உருவாக்கி அதற்கு பழங்குடியினர் சட்டமன்ற உறுப்பினரை அமைச்சராக அமர்த்த வேண்டும் உள்ளிட்ட 21 தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
மேலும் தர்மபுரி தொழில் மையம் சார்பில் பழங்குடியின மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு உதவிகள் குறித்து எட்வார்ட் ஸ்டீபன் அவர்கள் கருத்துரை வழங்கினார்.
இக்கூட்டத்தில் பழங்குடி செல்வம், ரம்யா, தேவேந்திரன், சுப்பிரமணி, கோவிந்தராஜ், பச்சையப்பன் (எ) குமார், வேடியப்பன், மாதேஷ், சுமதி, முத்துராஜ், பாலன், பால்ராஜ் உள்ளிட்ட பழங்குடியினர் சங்க நிர்வாகிகளும் 10 ற்கும் மேற்பட்ட பழங்குடியின கிராம மக்களும் கலந்து கொண்டனர்.
படம்; செம்மன அள்ளி கிராமத்தில் தமிழக ஆதிவாசிகள் கூட்டமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட தொழில் மைய மேலாளர் எட்வர்ட் ஸ்டீபன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்