அப்போது அவ்வழியாக பெரும்பாலை காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மாதையன் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது நாட்டு துப்பாக்கி வைத்துக்கொண்டு சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரித்த போது அவர் பெரும்பாலை அருகே உள்ள சாணார்பட்டி காட்டுவளவு கிராமத்தைச் சேர்ந்த மாதுகவுண்டர் மகன் ஆறுமுகம் (53) என்பது தெரியவந்தது. இவர் அவருடைய சொந்த நிலத்திலேயே விவசாய தொழில் செய்து வந்துள்ளார்.
இதனை அடுத்து அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்த போது இவர் நாட்டுத் துப்பாக்கியை வைத்துக் கொண்டு முயல், மான் என வன உயிரினங்களை வேட்டையாட பயன்படுத்தியது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது.
இதனை அடுத்து அவர் மீது பெரும்பாலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு பென்னாகரத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

