Type Here to Get Search Results !

ஒகேனக்கல் காவிரி ஆற்றை கடக்கும் போது அடித்து செல்லப்பட்ட இளைஞர்.


தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் ஊட்டமலை பகுதியை சேர்ந்தவர் பெருமாள் இவரது மகன் சஞ்சய் வயது 22 டிப்ளமோ பட்டயதாரி. இன்று மாலை 4 மணி அளவில் சஞ்சய் ஆலம்பாடி காவிரி ஆற்றை கடந்து அக்கரையில் உள்ள தனது பரிசலை எடுப்பதற்காக காவிரி ஆற்றில் நீந்தி சென்றுள்ளார்.


அப்போது நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக ஆற்றை கடந்து செல்ல இயலவில்லை. எதிர்பாராத விதமாக ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்த உறவினர்கள் ஒகேனக்கல் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் பரிசல் ஓட்டிகளின் உதவியுடன் ஆற்றில் அடித்து செல்லப்பட்டவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies