இம்முகாமிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ஊரகப்பிரிவு ரேனுகா, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் விஜயலட்சுமி அன்பழகன், ஊராட்சி மன்ற தலைவர் நாராயணசாமி, ஒன்றிய செயலாளர் அன்பழகன் ஆகியோர் குத்துவிளக்கை ஏற்றி முன்னிலை வகித்தனர்.
இம்முகாமில் அனைத்து துறைகளை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு. முதலமைச்சரின் விரிவான மருத்துவகாப்பீடுதிட்டம், சமுகநலத்துறை மூலம் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்புதிட்டம், வேளாண்மைத்துறை மூலம் மானியவிலையில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள், இ.சேவை மூலம் எளிய முறையில் விண்ணப்பிக்கும் வசதிகள் உள்ளிட்ட தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தனர்.
இம்முகாமில் இலவசமின்சாரம், பட்டாபெயர் மாற்றம், இலவச வீட்டுமனைபட்டா, முதியோர் உதவிதொகை, மகளிர் உரிமைத்தொகை குடும்பஅட்டை உள்ளிட்டவை வேண்டி பொது மக்கள் மனு அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள், முருகன்,வள்ளி நாகன், மாதுராஜ்,ராமசாமி, ஊராட்சி செயலாளர்கள் கண்ணன்,காந்தி, மதி, பிரபு,சிவசாமி வார்டுஉறுப்பிணர்கள் மற்றும் அனைத்து அரசு துறையை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

