தருமபுரி மாவட்டத்தில் அவசர ஊர்தியில் பணிபுரிந்து வந்த சிவநாதன் பைலட் கடந்த 10 மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டிலே இருந்து வருகிறார் அவருக்கு அவருடன் பணிபுரிந்த 108 ஆம்புலன்ஸ் சக ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிதி திரட்டி தருமபுரியிலிருந்து 80 கி மீ தொலைவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று சக ஊழியர்கள் அளித்த நிதியை ரூபாய் 7450 ஆம்புலன்ஸ் ஓட்டுனரும் சமூக ஆர்வலருமான ரமேஷ் அவரிடம் வழங்கினார்.
பின்பு பதினான்கு ஆண்டுகளாக ஆம்புலன்ஸ் சேவையில் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த சிவநாதனுக்கு இந்த 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுவனம் உதவி புரிய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

