தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் இருளப்பட்டி அருள்மிகு ஸ்ரீ காணியம்மன் திருக்கோயில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இத்திருவிழா கடந்த 13ம் தேதி கோவிலில் பூச்சாற்றுதல் நடைபெற்றது பின்னர் ஒரு வார காலமாக அனைத்து சமுதாய மக்கள் சார்பில் உபயங்கள் நடைபெற்றது பின்னர் இன்று திருத்தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது, இதில் சுற்று வட்டார கிராமத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி இந்து சமய அறநிலை துறை ஆய்வாளர் கி.மணிகண்டன் செயல் அலுவலர் கீர்த்தனா விழாகுழு தலைவர் சின்னப்பகவுண்டர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பெ.கௌதமன் ஊராட்சி மன்ற தலைவர் என்.பி.குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


