தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அடுத்த பொம்மிடி முதல் நிலை ஊராட்சி வட சந்தையூர் பகுதியில் தமிழக பசுமை திட்டத்தின் கீழ் ரூபாய் 21 லட்ச ரூபாய் மதிப்பீட்டின் மரகத பூஞ்சோலையை. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
இதில் தர்மபுரி வன மண்டல பாதுகாப்பு அலுவலர் பத்மா IFS, சமூக காடுகள் மற்றும் விரிவாக்க கோட்ட வன அலுவலர் DFO சக்திவேல். திமுக ஒன்றிய செயலாளர் சரவணன், பொம்மிடி உராட்சி மன்ற தலைவர் CMRமுருகன், வனச்சரக அலுவலர்கள் தீபா, கான்டீப்பன், முகமது அலி . சோமசேகர் அன்பு முகுந்தன், உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி பணியாளர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் இந்த நிகழ்வில் உடன் இருந்தனர் ,

