Type Here to Get Search Results !

திருமணமான ஒரு மாதத்தில் குழந்தை பெற்ற 17 வயது சிறுமி; காதலன் போக்சோ வழக்கில் கைது.


தர்மபுரி அருகே திருமணமான ஒரு மாதத்தில் 17 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்தார் இதனால் அவரை மணந்தவர் விட்டு சென்றார் சிறுமியை ஏமாற்றி கர்ப்பம் ஆக்கிய வாலிபர் மீது மகளிர் போலீசார் போக்சோவில் வழக்கு  பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சிறுமி  பனிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்தார் அப்போது பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை  சேர்ந்த சரத்குமார்  (29) என்பவர் திருமணம் செய்ய சிறுமியை பெண் கேட்டார் ஆனால் சிறுமிக்கு திருமண வயது ஆகவில்லை என்பதால் திருமணம் செய்து கொடுக்கவில்லை.


இந்த நிலையில் சரத்குமார் அந்த சிறுமியிடம் செல்போனில் பேசி பழகி வந்தார் தொடர்ந்து சிறுமி வீட்டில் யாரும் இல்லாத போது அங்கு வந்த சரத்குமார் சிறுமியிடம் நெருக்கமாகியுள்ளார் இது அவ்வப்போது தொடர்ந்து உள்ளது இதில் சிறுமி கர்ப்பம் அடைந்தார் இதையறிந்த சரத்குமார் அந்த சிறுமியை திருமணம் செய்ய மறுத்துள்ளார், எனினும் இதனை அறியாத அவரது தாயார் தர்மபுரி பகுதியை சேர்ந்த வேறு ஒருவருடன் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தார். திருமணமான ஒரு மாதத்தில் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது இதனால் அந்த பெண்ணை திருமணம் செய்தவர் அவரை அழைத்து வைந்து அவரது தயார் வீட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டார்.

 

இது குறித்து அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் அதன் பெயரில் போலீசார் விசாரணை நடத்தி பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்த சரத்குமார் என்பவர்  மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies