தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு மனிதநேயமிக்க சேவைகளை அடித்தட்டு மக்களுக்கு சேவை செய்து வரும் மை தருமபுரி அமைப்பு. இவர்களது சேவையை தருமபுரி மாவட்ட பொதுமக்கள் பலரும் மனதார பாராட்டி வருகின்றனர். இன்று 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு செம்மாண்டகுப்பம் கார்மேல் மெட்ரிக் பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மை தருமபுரி அமைப்பினரை அழைத்து பாராட்டி கௌரவித்தார் பள்ளியின் தாளாளர் திரு.பாக்யராஜ்.
மை தருமபுரி அமைப்பின் பல்வேறு மனிதநேயமிக்க சேவைகளை பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் எடுத்துரைத்து ரத்ததானம், உணவு சேவை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

