தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் 78வது சுதந்திர தின விழா கொண்டாட்டம், பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் பேரூராட்சி வளாகத்தில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி உணவினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத்தலைவர் கார்த்திகா பன்னீர்செல்வம், இளநிலை உதவியாளர் சம்பத் கவுன்சிலர்கள் கீதாவடிவேல், லட்சுமி முனிராஜ், யதிந்தர், கார்த்திகேயன், ரீனா வேலு, புவனேஸ்வரி மணிகண்டன், அபிராமி காந்தி, சிவக்குமார், வெங்கடேசன் பள்ளி மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் தூய்மை மேற்பார்வையாளர் தேன்மொழி தூய்மை காவலர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கப்பட்டது.

