இக்கூட்டத்திற்க்கு பேரூராட்சி செயல் அலுவலர் இந்துமதி முன்னிலை வகிதார். இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜெயசீலன் கலந்து கொண்டு, குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேசியதாவது, இளவயது திருமணங்கள் நடைபெறுவதால் சிறு வயதிலேயே கர்ப்பம்தரிக்கும் சூழல் ஏற்பட்டு சிறுமியின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. பெற்றோர்களை இழந்த ஆதரவற்ற குழந்தைகளை முறையாக பராமரிக்க வேண்டும், பாலின சீன்டல்களிலிருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்.
மேலும்செல்போன் உபயோகிப்பதை கட்டுப்படுத்துவதுடன், தேவையற்ற காட்சிகள் பார்க்காதவாறு கண்காணிக்க வேண்டும் என பேசியவர் குழந்தைகள் மீது யாரேனும் வன்முறையில் ஈடுபடுவது தெரிய வந்தால் 1098 மற்றும் 14417 ஆகிய தொலைபேசி எண்களில் தெரிவித்து குழந்தைகளின் பாதுகாப்பிற்க்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில் மகளிர் சுயஉதவி குழு உறுப்பிணர்கள், தொண்டு நிறுவன நிர்வாகிகள், காவல்துறை, சுகாதாரதுறை, பேரூராட்சி அலுவலர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

