Type Here to Get Search Results !

திமுகவின் அரூர் கிழக்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது


திமுகவின் தருமபுரி மேற்கு மாவட்டம் அரூர் கிழக்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது, இந்நிகழ்ச்சிக்கு  அக்கட்சியின் ஒன்றிய அவை தலைவர் எம்.ஜெய்னுலாப்தீன் தலைமை வகித்தார், ஒன்றிய செயலாளர் கோ.சந்திரமோகன் வரவேற்றார்,  மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஏ.சண்முகநதி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரளாசண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதில் அக்காட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் கலந்து கொண்டு கட்சியின் ஆக்கப்பணிகள் மற்றும் உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல் குறித்து  ஆலோசனைகள் வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில்  திமுகவின் மாநில தீர்மான குழு செயலாளர் கீரைவிஸ்வநாதன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் எஸ்.ராஜேந்திரன்,  மாவட்ட துணை செயலாளர் செ.கிருஷ்ணகுமார்,  முன்னாள் எம்எல்ஏ ஆர்.வேடம்மாள்,  தலைமை செயற்குழு உறுப்பினர் கே.சென்னகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் வாசுதேவன், கிழக்கு ஒன்றிய துணை செயலாளர்கள் கே.பெருமாள், அருள்மொழி, சம்பத் பொருலாளர் பிருந்தா செல்வம், மாவட்ட பிரதிநிதிகள் என்.சேதுநாதன், எஸ்டி.மதியழகன், கேஎஸ்.செந்தில்குமார், அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஏ.ரஜிமாறன் ஜி.பெருமாள் உமாபதி மதி  எஸ்எம் சேகர் கோட்டைசுகுமார்  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies