இவரது மனைவி கணகவள்ளி இவர்களுக்கு திருமணமாகி 4 வருடமாகிறது, இரண்டரை வயதில் ஹர்சத் என்ற ஆண் குழந்தை இருந்தது, காலை 11 மணி அளவில் கணகவள்ளி வீட்டில் சமையல் வேலை செய்து கொண்டிருந்தார், அப்போது ஹர்சத் வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தார், சிறிது நேரத்தில் குழந்தை காணாததால் பதற்றமடைந்த குடும்பத்தினர் குழந்தையை தேடினர்.
குழந்தை எங்கும் கிடைக்காததால், சந்தேகமடைந்தவர்கர்கள் அருகில் இருந்த கோயில் கிணற்றில் பார்த்த போது குழந்தை கிணற்றில் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது, இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் குழந்தையை மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த பாலக்கோடு போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.