பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றினார். இன்று நாடு முழுவதும் 78வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் தலைமையில் பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலர் சுருளி நாதன் ஆகியோர் ஒன்றிணைந்து இன்று சுதந்திர தினத்தை கொண்டாடினர் ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் தேசிய கொடி ஏற்றி தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
அதன்பின்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர் இந்த நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


