கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக கர்நாடக அணையில் இருந்து தமிழகத்திற்கு அதிகப்படியான உபரி நீர் திறந்து விடப்பட்டது இந்த நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்கவும் அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்தது.
இதனைத் தொடர்ந்து கர்நாடகா அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது இதனால் சின்னாறு போட்டிகள் பரிசல் துறையில் இருந்து பரிசல் இயக்கம் மட்டும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது குளிப்பதற்கு தொடர்ந்து நேற்று வரை 37 வது நாளாக தடையை நீடித்து வந்தது.
இந்த நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று 8000 கனஅடியாக குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

