தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பூவன்காடு கிராமத்தில் சுமார் 3000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஏழை எளிய நழிவடைந்த குடும்பங்களை சேர்ந்த மக்கள் தினசரி கூலி வேலைக்கு சென்று பிழைப்பை நடத்தி வருகின்றனர். குடிநீர், தெரு விளக்கு, பேருந்து வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக ஏங்கி வரும் மக்கள், இது குறித்து பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கை இல்லை என மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
தங்கள் கிராமத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் வழங்கப்படும் குடிநீர் வருவதில்லை, உப்பு தண்ணீரை பயன்படுத்தி வருவதால் ஒரு சிலருக்கு கிட்னி பாதிப்பு ஏற்பட்டு உள்ளன. என வேதனையுடன் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பேருந்து நிறுத்தம் இல்லாததால் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் இருந்து நடந்தே சென்று பேருந்து ஏறுவதாகவும்.
மேலும் ஆடு, மாடு, கோழி போன்ற அரசு சலுகைகளும் தங்கள் கிராமத்திற்கு வந்து சேரவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் பெண்கள், 100 நாள் திட்டத்தில் கிடைக்கும் ஏரி வேலை கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவே குறைந்த நாட்களே வேலை வழங்குவதாகவும் ஒருசில மாதங்களாக வேலை கூட வழங்கவில்லை என்கின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் தங்கள் கிராமத்திற்கு அரசு சலுகைகளை கொண்டு வர வேண்டும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

