தருமபுரி கிழக்கு மாவட்ட தமாகா சார்பில் அரூரில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் மாவட்ட தலைவர் சிவ.அரவிந்தன் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமினை மாநில கொள்கை பரப்பு செயலாளர் பி.மாதையன் தொடங்கிவைத்தார். இதில் மாநில இளைஞரணி செயலாளர் சங்கர்கணேஷ் இளைஞரணி மாவட்ட தலைவர் அன்பரசு தொழிற் சங்கதலைவர் சரவணன் வட்டார தலைவர் குழந்தைவேலு முருகன் பிரதிநிதி மாது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

