தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த அண்ணாமலை அள்ளி கிராமத்தை சேர்ந்த குமார், இவர் திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளராக உள்ளார்.
அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி விஜயகுமார் (வயது.42) என்பவர் நேற்று மாலை குடிபோதையில் குமாரின் வீட்டிற்க்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். போதை தெளிந்த உடன் வந்து பேசு இப்போ போ என கூறியுள்ளார், அதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை தரக்குறைவாகவும், அவதூறகவும், ஆபாசமாகவும் பேசியவர் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து குமார் பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
உடனடியாக சம்பவ இடத்திற்க்கு சென்ற போலீசார் விஜயகுமாரை ஸ்டேசனுக்கு விசாரணைக்கு அழைத்த போது போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டார். அவரை கைது செய்த போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர்.

