தருமபுரி மாவட்டத்தில் ஆதரவன்றியும், ஏழ்மையிலும் இறந்தவர்களின் புனித உடல்களை நல்லடக்கம் செய்யும் பணியை மை தருமபுரி அமைப்பினர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 முதல் இறந்தவர்களின் புனித உடல்களை தங்கள் உறவுகளை எண்ணி நல்லடக்கம் செய்து வருகின்றனர்.
தருமபுரி இருப்புப்பாதை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தருமபுரி - சிவாடி ரயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் நபரின் சடலம் இருந்துள்ளது. இதைப்பற்றி தகவல் அறிந்த இருப்பு பாதை காவலர்கள் பிரேதத்தை கைப்பற்றி விசாரித்த போது இவர் யார் என்று தெரியவில்லை. எனவே அவரின் உடலை அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது, அதன்படி இன்று தருமபுரி இருப்புப்பாதை காவலர் சபரிநாதன், மை தருமபுரி நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், மை தருமபுரி அமைப்பின் மருத்துவ ஆலோசகர் மருத்துவர் ஸ்ரீகாந்த் ஆகியோர் இறுதி அஞ்சலி செய்து நல்லடக்கம் செய்தனர்.
மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 104 ஆதரவற்ற உடல்கள் நல்லடக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
.gif)

