Type Here to Get Search Results !

வணிகவியல் துறை சார்பில் ஒருநாள் பயிற்சி பட்டறை.


மருதம் நெல்லி கல்விக் குழுமம் நல்லானூர்,ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் CSC கணினி மையம், தர்மபுரி   இணைந்து மாணவ மாணவியர்களுக்கு "ஒரு நாள் பயிற்சி பட்டறை Tally மென்பொருள் மற்றும் தொழில் வாய்ப்புகள் " என்னும் தலைப்பில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் கா. கோவிந்த்  தலைமை வகித்தார். குழுமத்தின் செயலாளர் திருமதி.காயத்ரி கோவிந்த் அவர்கள் முன்னிலை வகித்தார்.  ஜெயம்  கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் .சி. பரஞ்சோதி மற்றும்  மருதம்  நெல்லி பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் , நா.மகேந்திரன் வாழ்த்துரை வழங்கினர்.   இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக  ஆவிச்சி கிருஷ்ணன், மேலாண்மை இயக்குனர், சென்னை, 


பிரகாஷ், கிளை மேலாளர், CSC கணினி பயிற்சி மையம்,  தர்மபுரி,  திரு ராஜா, துணை கிளை மேலாளர், CSC கணினி பயிற்சி மையம், தர்மபுரி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ/ மாணவியர்களுக்கு Tally மென்பொருள் மற்றும் அதனை சார்ந்த தொழில் துறை வாய்ப்புகள் பற்றியும் விளக்க உரை வழங்கினர்.    இந்நிகழ்வில் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் மற்றும் வணிக நிர்வாகவியல் துறை சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.  நிகழ்வை  வணிகவியல் துறைத் தலைவர் முனைவர். அ.இம்தியாஸ் இந்நிகழ்வினை  ஒருங்கிணைத்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies