தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு கண்மருத்துவமனையில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சார்பில் சுதந்திரத்தை முன்னிட்டு சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இலவச இரத்ததான முகாம் நடைப்பெற்றது.
முகாமிற்க்கு பாலக்கோடு பேரூராட்சி தலைவர் முரளி, அரசு தலைமை மருத்துவர் பாலசுப்பிரமணியம், காவல் ஆய்வாளர் பாலசுந்தரம், கவுன்சிலர் குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக தர்மபுரி மாவட்ட சுகாதார நல பணிகள் மற்றும் மருத்துவ இணை இயக்குநர் மருத்துவர் சாந்தி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி முகாமினை துவக்கி வைத்தார்.
இம்முகாமில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டத் தலைவர் ஜஹாங்கீர் துணைத் தலைவர் பாபு ,மற்றும் நிர்வாகிகள் அஷ்ரப்அலி, அமீர்ஜான், உள்ளிட்ட ஏராளமான இஸ்லாமிய சகோதார, சகோதரிகள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

